'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு'
நோக்கம்
செம்மொழியாம் தமிழ்மொழியின் பழம்பெருமைகளை இலக்கண – இலக்கியங்களோடு மாணாக்கர்களுக்கு கற்பித்து சிறந்த ஒரு சமூகத்தை உருவாக்குவதே தமிழ்த்துறையின் நோக்கமாகும்.
இலக்கு
- தமிழ் மொழியில் புதுமை புகுத்துதல்.
- பல்துறைப் பயன்பாட்டிற்கேற்ப மாற்றி கணினி முதலான இணையதளம் மூலம் மாணவர்கள் அறிவைப் பெறவும் அதன் அடிப்படையில் வேலை வாய்ப்புகள் உருவாக வழிகாட்டுதல்.
- தமிழ் மொழி சார்ந்த கண்காட்சி மற்றும் போட்டிகள் நடத்தி அவற்றை ஆவணப்படுத்தி எதிர்கால சமூகத்திற்கு வழங்குவது.
தமிழ்த்துறையின் சிறப்பம்சங்கள்
- 2005 இல் திருவள்ளுவர் பல்கலைக் கழக பாடத்திட்டத்தின்படி கல்லூரித் துவங்கிய போதே அனைத்துப் பாட வகுப்புகளுக்கும் தமிழ் பொது மொழியாக கற்பிக்கத் தமிழ்த்துறை மலர்ந்தது.
- மாணாக்கர்களின் தமிழ் - இலக்கிய அறிவை வளர்ப்பதுடன் உலகெல்லாம் பரவி உள்ள தமிழின மக்களின் வாழ்வியலை அறிமுகப்படுத்துவது.
- மாணாக்கர்களின் தமிழ் மொழி சார்ந்த படைப்பாற்றல்களை வெளிக்கொணர்ந்து புதிய பல ஆய்வுகளை நிகழ்த்தி தமிழ் மொழித் திறனை மேம்படுத்துவது தமிழ்த்துறையின் இலக்காக அமைகிறது.
- அனைத்துத் துறை மாணவர்களையும் ஒன்றிணைத்து தமிழ் மொழியின் இலக்கியச் சுவையானது முறையாக ஊக்குவிக்கப்படுகிறது.
- திருவள்ளுவர் பல்கலைக் கழகம் தமிழில் பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ள அனுமதி வழங்கி உள்ளதைத் தொடர்ந்து தமிழ் முனைவர் பட்டத்திற்கான தமிழாய்வுப் பணி இத்துறையில் நடைபெற்று வருகிறது.
- அனைத்துத் துறை மாணவர்களையும் ஒன்றிணைத்து ஆண்டுதோறும் கலை இலக்கிய விழா நடத்தப்பட்டு அதில் வினாடி வினா, குறள் ஒப்புவிப்பு, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, கவிதைப் போட்டி, சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் என நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்படுகின்றது.
- தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தகுதிப்படுத்தும் நோக்கத்தோடு பிற திறன் மேம்பாட்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது.
தமிழ்த்துறைப் பேராசிரியர்கள்
- முனைவர் ப. பரமேஸ்வரி M.A., B.Ed., M.Phil., Ph.D
தமிழ்த்துறைத் தலைவர்
- முனைவர் இ. மேரி இம்மாக்குலேட் ராஜகுமாரி M.A., B.Ed., M.Phil., Ph.D. NET
தமிழ்துறை உதவிப் பேராசிரியர்
- பேராசிரியர் யா. ஆரோக்கிய நாயகம்மாள் M.A., B.Ed., M.Phil., NET
தமிழ்துறை உதவிப் பேராசிரியர்
பேராசிரியர்கள்
S.No | Name of Faculty | Designation | Profile |
---|---|---|---|
1 | முனைவர் ப. பரமேஸ்வரி | தமிழ்த்துறைத் தலைவர் | ![]() |
2 | முனைவர் இ. மேரி இம்மாக்குலேட் ராஜகுமாரி | தமிழ்துறை உதவிப் பேராசிரியர் | ![]() |
3 | பேராசிரியர் யா. ஆரோக்கிய நாயகம்மாள் | தமிழ்துறை உதவிப் பேராசிரியர் | ![]() |
நிகழ்ச்சிகள்





